இஸ்லாம் உங்கள் இதயத்தோடு பேசுகின்றது.....

இஸ்லாம் அழ‌கான‌ ஓர் வாழ்விய‌ல் நெறியாகும்.அது அகில‌ உல‌க‌ ம‌க்க‌ளை ச‌மாதான‌த்தை நோக்கி அழைக்கின்ற‌து.அத‌ன் கொள்கைக் கோட்பாடுக‌ள்
ம‌க‌த்தான‌ இறைவ‌னால் யாக்க‌ப்ப‌ட்டவையாகும்.அத‌ன் மூலாதார‌ங்க‌ள்
 இர‌ண்டு மாத்திர‌மே!அல்குர்ஆனும் ந‌பிக‌ள் நாய‌க‌த்தின் வாழ்க்கை நெறியுமே அவைக‌ளாகும்.அவ்விர‌ண்டில் இட‌ம் பெறும் அனைத்தும் இஸ்லாம் என‌க் கொள்ள‌ப்ப‌டும்.இஸ்லாம் ம‌னித‌ர்க‌ளை ஒரு க‌ட‌வுளை மாத்திரம் வ‌ண‌ங்குமாறு ப‌ணிக்கின்ற‌து.அவ‌னுக்கு யாதொன்றையும் வ‌ண‌க்க‌த்தில் கூட்டுச் சேர்ப்ப‌தை இஸ்லாம் அனும‌திக்க‌வில்லை.ஜாதி வேறுபாட்டையும்,மத புரோகிதத்தையும்,ம‌த‌த்தின் பெயரால் அர‌ங்கேறும் கொடுமைகளான‌ வ‌ர‌த‌ட்ச‌னை,தீக்குளிப்பு,தேவ‌தாசிக‌ளாக‌ வேட‌ம் பூணுத‌ல்,ப‌ற‌வைக் காவ‌டி,துற‌வ‌ற‌ம்,ம‌த‌குருவை வ‌ண‌ங்குதல்,சகுனம் பார்த்தல்,நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல்,மந்திரித்தல் போன்ற‌ மெள‌ட்டீக‌ங்க‌ளை இஸ்லாம் வேரோடும் வேர‌டி ம‌ண்ணோடும் ஒழித்துக் க‌ட்ட‌ முற்ப‌டுகின்ற‌து.சிவில் ச‌மூக‌த்தைப் பாதிக்கும் ந‌டைமுறைக‌ளைக் கைவிடுமாறு கூறும் இம்மார்க்க‌ம் வ‌ட்டி,இல‌ஞ்சம்,சூதாட்ட‌ம் வ‌ன்முறை போன்ற‌ அநீதிக‌ளைக் கைவிட்டு ம‌னித‌ப்புனித‌ர்க‌ளாக‌ வாழ‌ அகில‌ உல‌க‌ ம‌க்க‌ளை அழைக்கின்ற‌து.முற்போக்கு சிந்த‌னை கொண்ட‌ இம்மார்க்க‌ம் இவ்வாறான‌ எழுச்சி மிக்க‌ க‌ருத்துக்க‌ளை த‌ன‌து வேத‌மான‌ அல்குர்ஆனில் கூறிவ‌தினூடாக‌ "ம‌றும‌ல‌ர்ச்சி" கொண்ட‌ ம‌னித‌ ச‌முதாய‌த்தை உருவாக்க‌ விரும்புகின்ற‌து.இம்மார்க்க‌த்தில் ஏற்ப‌டும் ச‌ந்தேங்களை,அறிந்த‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்டு அத‌ற்கான‌ த‌குந்த‌ சான்று ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட்டால் மாத்திர‌ம் ஏற்றுக் கொள்ளுங்க‌ள் என்று மக்களைப் பனிக்கும் ஓரே மார்க்க‌ம் இஸ்லாம் அன்றி வேறில்லை என‌லாம்.இஸ்லாத்தின் கொள்கைக‌ளை க‌ல‌ப்ப‌ட‌மில்லாம‌லும்,மூடி ம‌றைக்காம‌லும்,இஸ்லாத்தில் சொல்லப்பட்ட அத்தனை விடயங்களையும் பிர‌ச்சார‌ம் செய்து வ‌ரும் தாருல் அத‌ர் அத்தஅவிய்யா எனும் முற்போக்கு சிந்தனை கொண்ட‌ அமைப்பினால் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மூட நம்பிக்கைகளுக்கும் பிற்போக்குத்தனங்களுக்கும் எதிராகக் குரல் கொடுத்து வரும் இவ்வமைப்பு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே
www.daadanswaer.com எனும் இத்தளத்தை அல்லாஹ்வின் அருளால் ஆரம்பித்துள்ளது.இத்த‌ள‌த்தில் முஸ்லிம் முஸ்லிம‌ல்லாத‌ ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ள் இஸ்லாத்தில் ஏற்ப‌டும் ஐய‌ப்பாடுக‌ளை எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூல‌மாக‌ அத‌ற்கான‌ தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள‌ முடியும்.இஸ்லாத்தை சர்வதேசமெங்கும் அதன் தூய வடிவில் எடுத்துரைப்பதற்காக www.dharulathar.com

எனும் தளத்தையும் இவ்வமைப்பு ஏற்கனவே நடாத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




 
Make a Free Website with Yola.