![]() இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்களுக்கும்,முஸ்லிமல்லாத சகோதர,சகோதரிகளுக்கும் ஏற்படும் ஐயப்பாடுகளுக்கு பதிலளிக்கும் ஓர் இணைய தளமே "DAAD ANSWER",இணைய தளமாகும்.இவ்விணைய தளம் தாருல் அதர் அத்தஅவிய்யா எனும் முற்போக்கு சிந்தனை கொண்ட இஸ்லாமிய அமைப்பினால் நடாத்தப்பட்டு வருகின்றது.இஸ்லாத்தின் சட்டமூலாதாரங்களான அல்குர்ஆனையும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் போதிக்க வேண்டிய மார்க்க அறிஞர்கள்,ஆதாரமற்ற பல போலியான செய்திகளை மக்களுக்கு மார்க்கமெனும் பெயரில் போதித்திருப்பதாலும்,முஸ்லிமல்லாத அன்பர்கள்,முஸ்லிம்களின் பிழையான நடவடிக்கைகளால் இஸ்லாத்தை சடங்கு சம்பிரதாய மார்க்கமாகவும்,பயங்கரவாதத்தைப் போதிக்கும் தீவிரவாதக் கொள்கையாகவும் தவறாகப் புரிந்திருப்பதாலும்,இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மக்களுக்கு எடுத்துச் சொல்வது மார்க்கம் தெரிந்தவர்களின் கடமை என்பதனாலுமே இத்தளத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.எனவே முஸ்லிம் முஸ்லிமல்லாத அன்பர்கள் இஸ்லாம் தொடர்பான தங்களது சந்தேகங்களை மின்னஞ்சல் ஊடாக எமக்கு அனுப்பி தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். அன்புடன் DAAD ANSWER GROUP |







